2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

நோன்புப் பெருநாள் விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மும்தாஜ்)  

நோன்புப் பெருநாளை முன்னிட்டு புத்தளம் மாவட்ட விருதோடை பிரதேசத்தில் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எஸ். எச். எம். முஸம்மில் தலைமையில் யுனைடெட் விளையாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நோன்புப் பெருநாள் விளையாட்டுப் போட்டிகள் விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றன.

பல்லாயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட இந்த விளையாட்டுப் போட்டியில் ட்ரையல் மோட்டார் சைக்கிள்களின் மோட்டர் குரோஸ் ஓட்டப் போட்டி அனைவரையும் கவர்ந்ததாக அமைந்திருந்தது.


இங்கு மாட்டு வண்டி ஓட்டப் போட்டி, முச்சக்கரவண்டி ஓட்டப் போட்டி, அனைத்து ரக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் என்பனவும் இடம்பெற்றதோடு பெறுமதியான பரிசில்களும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இப்போட்டிகளில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் எம். எஸ். சேகு அலாவுதீன் (அன்சார்) அதிதியாகக் கலந்து கொண்டார்.

-------
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .