Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2023 நவம்பர் 08 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் பொலன்னறுவை ஆனந்தா மகளிர் பாடசாலையின் புனரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
ஹிங்குராங்கொட விமானப்படைத்தளத்தினால் மேற்கொள்ளப்படும் சமூக சேவை பணிகளில் ஒன்றாக பொலன்னறுவை ஆனந்தா மகளிர் கல்லூரியின் 71 வருட பழமைவாய்ந்த சுகலா தேவி மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு பழைய வகுப்பறை கட்டடம் பிரதான நிர்வாக கட்டடமாக புதுப்பிக்கப்பட்டு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவால் பாடசாலையின் பாவனைக்காக கையளிக்கப்ட்டது.
விமானப்படை தளபதியின் பணிப்புரைக்கு இணங்க ஹிங்குராகொட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் குணவர்தன அவர்களின் மேற்பார்வையின்கீழ் 10 வாரங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago