Mayu / 2024 ஜூலை 09 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிவித்திகலை, வட்டாபொத, யொஹூன் கிராமத்தில் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள பாதையில் இருந்து முகத்தில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் சடலம் ஒன்று திங்கட்கிழமை (08)கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் தாயார் வட்டாபொத விகாரைக்கு அருகில் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதோடு, சம்பவத்தன்று சிறுமி பாடசாலைக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமியை விற்பனை நிலையத்திற்கு வருமாறு தாய் தொலைபேசி அழைப்பொன்றை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விற்பனை நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், தாய் வீட்டுக்கு குறித்த பாதை வழியாக சென்ற போது, மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது, இறப்பர் மரத்தில் வெட்டப்பட்ட இறப்பர் மரத்தின் கிளை சிறுமியின் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
37 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago
43 minute ago
52 minute ago