Freelancer / 2025 டிசெம்பர் 20 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதினெட்டு சித்தர்களின் மூத்த சித்தரான ஸ்ரீ அகத்தியர் மாமுனிவரின் ஜீவநாடி அருள் வாக்கிற்கு அமைய கொழும்பில் எதிர்வரும் 21 டிசம்பர் 2025 ஞாயிற்றுகிழமை அன்று இலங்கை ஸ்ரீ அகத்தியர் கூட்டுபிரார்த்தணை குழுவினர் ஏற்பாடு செய்யும் கூட்டுபிரார்த்தணையானது கொட்டாச்சேனை ஸ்ரீ வரதராஜர் விநாயக ஆலயம், சாய் சரணாலய மண்டபத்தில் நடைபெறும்.
காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கும் இவ்நிகழ்வு மாலைவரை நடைபெற திருவருள் பாலித்துள்ளது. இதில் ஜீவ நாடி வாசித்து, சிவபுராணம் கோளாருபதிகம் முற்றோதல் இடம்பெறும்.
இந்நிகழ்வுக்காக தமிழ்நாட்டில் இருந்து ஜீவ நாடி வாசிக்கும் அருளாளர் திரு .ஜானகி ராமன் ஐயா அவர்கள் கலந்துகொள்கிறார்.
இலங்கைக்கு வரவிருக்கும் மிகப்பெரிய இயற்கை அனார்த்தத்தின் தாக்கத்தை குறைத்திடவும் இறந்த ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டி இவ் கூட்டுப்பிரார்த்தனை இடம்பெறும். அனைவரும் இந்த புண்ணிய கைங்கரியத்தில் கலந்துகொண்டு அருள்பெருவதோடு நமது நாட்டையும் மக்களையும் பாதுகாப்போமாக. இது சித்தர்கள் நமக்கு கொடுக்கும் அறிய வாய்ப்பு. இதில் சித்தர்கள் ஜீவ நாடியின் மூலம் நம்மோடு தொடர்புகொண்டு வாக்குரைப்பார்கள்.
அனைத்து சித்தர்களின் நேரடி ஆசிகளைபெற வாரீர். (தொடர்பு எண் ; 0719560460, 0777609955, 0777318030) R
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025