Janu / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி, தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் புதன்கிழமை (22) முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ‘இலங்கை கடற்படை கப்பல் விஜய’ (SLNS Vijaya) குழுவினர், தில்லையடி கடற்கரை பகுதியில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 26 மூட்டைகளை பரிசோதித்தபோது, அவற்றில் சுமார் 1,038 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த உலர்ந்த மஞ்சள் கையிருப்பு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எம்.எச்.எம். சியாஜ்

26 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
50 minute ago
53 minute ago