Freelancer / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த பல விற்பனை நிலையங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை, ஹப்புத்தளை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள பல விற்பனை நிலையங்களில் கடந்த 24ஆம் திகதி திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்போது, கீரி சம்பா மற்றும் ஏனைய அரிசி வகைகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதில் திருகோணமலை பகுதியில் ஒரு வர்த்தகருக்கும், காலி பகுதியில் இரு வர்த்தகர்களுக்கும், தங்காலை பகுதியில் இரு வர்த்தகர்களுக்கும், கிராந்துருகோட்டை பகுதியில் ஒரு வர்த்தகருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹப்புத்தளை பகுதியில் உள்ள கடை உரிமையாளர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அங்கு அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ஹப்புத்தளை பகுதி வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதமும், அனுராதபுரம் பகுதி வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R
3 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago