Janu / 2025 மார்ச் 24 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை களப்பில் உல்லாசமாக படகோட்டிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, கட்டுகுருந்த பகுதியைச் சேர்ந்த 33 வயதான முகமது உசைர் முகமது இன்சாஃப் மற்றும் முகமது ஹுசைன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏரியில் படகு சவாரி செய்வதாக தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் இச் சம்பவம் தொடர்பான வழக்கு மூலங்களிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை களப்பில் சடலமொன்று மிதப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சடலத்தை மீட்டு, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மற்றொரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10 minute ago
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
07 May 2026