Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரவு நேர 9 மணி பின்னரான பிரயாணத்தில் மக்களின் அவதி புத்தளம் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் பிரதான பாதை இடையே பாலாவி ஊடாக (சுமார் 40km) கல்பிட்டி நோக்கி செல்லும் புலம் பெயர் மக்கள் பயன்படுத்தும் பாதையில் ஏற்படுகின்ற போக்குவரத்து தொடர்பான பாரிய சிரமங்களை மக்களின் குரலாக இந்த ஆய்வின் மூலம் அடையாளப்படுத்த முடியும்.
இலங்கையிலே 1990 களில் இருந்து இன்றுவரையிலும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி, பாராளுமன்ற மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஊடாக எத்தனை அரசாங்கங்கள் வந்தாலும் எத்தனை அரச நிர்வாகிகள் பணியமர்த்தம் செய்யப்பட்டாலும் எத்தனை அரசியல்வாதிகளும் ,அரசியல் கட்சிகளும் உருவாகினாலும் இதற்கான ஒரு முடிவானது இன்னும் பெயர் அளவில் ஒரு குறையாக காணப்பட்டாலும் நடைமுறையில் குறைபாடாகவே இன்றும் காணப்படுகிறது.
இவை மட்டுமல்லாது 1990 களின் பின்னர் புலம்பெயர்ந்து வந்த சிறுபான்மை மக்களின் குரல்கள் இன்றும் ஒளித்த வண்ணமே உள்ளது குறிப்பாக ஓரம் கட்டப்பட்ட மக்கள் மற்றும் பெண்களுடைய அரசியல் தொடர்பான குரல்கள் மிகவும் அதிகமானதாகவே காணப்படுகின்றது.
அதில் ஒரு விடயமாகவே இந்த இரவு நேர பயணம் ஒரு சான்றாக குறிப்பிடக்கூடிய விடயமாக கருதப்படுகிறது. எவ்வாறு என்றால் வெவ்வேறு மாவட்டங்களில் தொழில்கள் அல்லது ஏதேனும் அலுவல்களில் முடித்துவிட்டு பஸ் சேவையினை எதிர்பார்த்து இரவு 9 மணிக்கு பின்னரான வீடு திரும்பும் அனேகமானவர்களின் நிலை தொடர்ந்து ஏமாற்றத்துக்குரியதாகவே காணப்படுகிறது.
ஏனெனில் பாலாவிலிருந்து கல்பட்டி நோக்கிய இறுதி பஸ் சேவையானது பி.ப 9 மணியின் பின்னருடன் முடிவடைய கூடியதாக உள்ளது. இந்த நிலையில் ஏனைய மாவட்டங்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கு அது ஒரு அதிருப்தியான நிலையாகும்.
பஸ் சேவை இல்லாத சமயத்தில் வேறு வழியின்றி அந்த பாதையினை பயன்படுத்துகின்ற ஏனைய வாகனங்களில் தனது உதவிகளை நாடிய வண்ணம் செயற்படுவார்கள் அதில் குறிப்பிட்ட சிலர் மற்றும் தெரிந்த நபர்களின் உதவிகளை மேற்கொள்ள கூடியவர்களாகவும், தற்போது இலங்கையை பொறுத்தமட்டில் தனிமனித பாதுகாப்பின் பிரகாரம் அவ்வாறான உதவிகள் கிடைப்பது கேள்விக்குறியானது.
அதை தவிர தங்களது வீடுகளில் இருந்து வாகனங்களினை அழைத்து அவர்களின் ஊடாக தங்களது வீடுகளுக்கு செல்லக்கூடிய நிலையும் அவ்வாறான வாகன வசதிகள் அற்றவர்கள் பாலாவிலிருந்து முச்சக்கர வண்டி சேவையினை நாடுகின்றனர் இவ்வாறு முச்சக்கர வண்டிகளின் சேவைகள் பிற்பகல் 11 மணி பின்னர் சேவை கட்டணம் ஆனது அதிகமாகவும் அதிக தூர பிரயாணங்களுக்கு முச்சக்கர வண்டி ஓட்டுனர்களின் விருப்பமின்மையினாலும் பலர் இன்னும் இரவு நேரத்தில் வேறு வழியின்றி அங்கேயே இரவினை கழித்துவிட்டு அதிகாலை 6 மணி பஸ் சேவையினை பயன்படுத்துகின்ற ஒரு நிலை இங்கே காணப்படுவதினை மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக குறிப்பிட முடியும்.
எனவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவது இதற்கான நிரந்தர தீர்வுக்கான முன்னேற்பாடாக அமையலாம்.
Divisional Secretary D A P Danansooriya கல்பிட்டி பிரதேச செயலகத்தை வழிநடத்துதல், அனுமதி, போக்குவரத்து உட்பட நிர்வாக செயல்பாடுகள்
Grade III Officer S B Samarasekera பிரதேச செயலகத்தில் போக்குவரத்துக்கான செயல்முறைகளில் ஆதரவான அதிகாரி
மக்களவை உறுப்பினர் (MP) Mohamed Faisal, M.P. புத்தளம் தொகுதியை கொண்டு போக்குவரத்து மற்றும் வாகன சார்ந்த மாந்திரிக நடவடிக்கைகளுக்கு சட்ட மறைபுரியல்களை முன்வைத்தல் மற்றும் நிலைமைகளுக்குரிய கூட்டாட்சியில் பங்கேற்பு மற்றும் உள்ளூராட்சி மன்ற சபை உறுப்பினர்கள்.
M.M.Akeel
17 minute ago
26 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
36 minute ago