2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் ஒருவர் பலி

Janu   / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு சமாகமதல பகுதியில் திங்கட்கிழமை (17) அன்று உழவு இயந்திரம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் சாரதி உயிழந்துடன் , மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசல்பாடு கிராமத்தைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்  

குறித்த பிரதேசத்தில் கரை வலை தொழில் நடைபெற்று வந்த நிலையில் குறித்த  உழவு இயந்திரம் மூலம் அங்கிருந்த படகு ஒன்றை இழுத்தெடுப்பதற்கு முற்பட்ட போது  உழவு இயந்திரம் திடீரென தலை கீழாக கவிழ்ந்துள்ளது. 

இதன் போது உழவு இயந்திரத்திற்குள் சாரதியும், மற்றுமொரு நபரும் நசுங்கி காயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு  உடனடியாக கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

எனினும், உழவு இயந்திரத்தின் சாரதி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன்,  மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .