Janu / 2026 மார்ச் 10 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி, முகத்துவாரம் மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடல் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 1,146 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 03 டிங்கி படகுகளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் 'விஜய' கப்பலுக்குச் சொந்தமான உச்சமுனை கடற்படைப் பிரிவினர், கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் நடத்திய சோதனையில் 418 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகையும், அதில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, கீரிமுந்தல் கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது, மேலும் இரண்டு சந்தேகத்திற்குரிய டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன. இதன்போது 728 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளுடன் 05 சந்தேக நபர்கள் கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 51 வயதுக்குட்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திலும், சந்தேக நபர்கள் புத்தளம் மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எம்.யூ.எம். சனூன்


9 hours ago
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Mar 2026
14 Mar 2026