R.Tharaniya / 2025 ஜூன் 01 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருட்கள் ஏற்றி வந்த லொறி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை (31) காலை பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லெல பிரதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - கொழும்பு வீதியூடாக பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்,விபத்தில் லொறியை செலுத்திச் சென்ற சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எச்.எம்.எம்.பர்ஸான்
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago