2026 மே 06, புதன்கிழமை

காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டார் விஜய்

Freelancer   / 2026 மே 06 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியுள்ளார் என  அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

டில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி உடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுடன் கே.சி. வேணுகோபால் கருத்து தெரிவிக்கையில்,

தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க தலைவர் விஜய் ஆதரவு கோரியுள்ளார். விஜய்யின் கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, முக்கியத்துவம் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் உரிய முடிவெடுக்கலாம்.

பெருந்தலைவர் காமராஜர்தான் த.வெ.கவின் கொள்கை தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். பா.ஜ.க அங்கம் வகிக்கும் அரசு வரக்கூடாது எனக் குறிப்பிட்டார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .