R.Tharaniya / 2025 மே 19 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH-179 மூலம் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 21 வயது தாய்லாந்து இளைஞர்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக ரூ.79 மில்லியனுக்கும் அதிகமான'குஷ்' கஞ்சாவை கடத்த முயன்றதற்காக இலங்கை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
BIA வருகை முனையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள்கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் பயணியை சோதனை செய்த போது,அவரது பைகளில் 7 கிலோ 900 கிராம் குஷ் போதை பொருளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட நபரையும் போதைப்பொருட்களையும் கட்டுநாயக்க விமான நிலைய காவல் துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


டி.கே.ஜி. கபில
36 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
4 hours ago