Janu / 2026 மார்ச் 09 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 2 கோடியே 76 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான "குஷ்" போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர் திங்கட்கிழமை (09) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இந்திய நாட்டைச் சேர்ந்த 27 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா FD-047 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் 06 பொதிகளாக பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 762 கிராம் எடையுள்ள "குஷ்" போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டீ.கே.ஜி கபில

3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago