Editorial / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை மாவட்டத்தில் ஒரே நாளில் 84 கொரோணோ தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 4,494 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
24 ஆம் திகதியான நேற்று 24 மணித்தியாலயத்தில் 84பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தெஹியோவிட்டயில் மாத்திரம் 184பேர் பதிவாகியுள்ளனர்.
இதுவரை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 18, 017 ஆக இருந்ததாகவும் தற்பொழுது 4,494பேர் தனிமைப்படுத்தலில் இருக்க ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் இதுவரையிலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளன என மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவற்றில் அதிகமான தொற்றாளர்கள் தெஹியோவிட்ட பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தல்துவ வாரசந்தை வியாபாரிகள் 80 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 18பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிச்செய்யப்பட்டதை தொடர்ந்து தல்துவ கிராம சேவக பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் தல்துவ நகரம் மறுஅறிவித்தல் வரை கடந்த 19ஆம் திகதி முதல் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. தெஹியோவிட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, அவிசாவளை, கொஸ்கம, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களும் நேற்று முன்தினம் முதல் தனிமைப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago