Janu / 2026 மார்ச் 11 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 52 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் வாசனைத் திரவியங்களை க்ரீன் சேனல் ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இரு வெளிநாட்டவர்கள் உட்பட மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புதன்கிழமை (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் இருவரும் 29 மற்றும் 38 வயதுடைய சீனப் பிரஜைகளாவர். இவர்கள் இலங்கையில் சுற்றுலா வழிகாட்டிகளாக பணிபுரிபவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மற்றையவர் கொழும்பு, வெள்ளம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் ஒருவராவார்.
குறித்த மூவரும் புதன்கிழமை (11) அதிகாலை 12.10 மணியளவில் இந்தியாவின் சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-102 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்களது பொதிகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 33,600 சிகரட்டுகளை கொண்ட 168 கார்ட்டூன் அட்டை பெட்டிகள் மற்றும் சுமார் 20 கிலோகிராம் எடையுள்ள வாசனைத் திரவியங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டீ.கே.ஜி.கபில

13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago