2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக காணிகளை நிரப்பிய இருவர் கைது

Janu   / 2023 நவம்பர் 07 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவத்துகொட - கலல்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாகக்  காணிகளை நிரப்பிய இருவர் திங்கட்கிழமை (06)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலல்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் டிப்பர் இயந்திரம் மற்றும் மண் அகழ்வு இயந்திரம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபர்கள் மற்றும் தொடர்புடைய வாகனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு    விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முனீரா அபூபக்கர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .