Editorial / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஹெரய, கினியங்கஹவத்த பிரதேசத்தில் 11 வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவனின் தாயார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதுடன் தந்தை கொழும்பில் பணிபுரிந்து வருகின்றார்.
சிறுவன் உறவினர் வீட்டில் தங்கியுள்ள நிலையில் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழுவொன்று, பிள்ளைகளின் துன்புறுத்தல் மற்றும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்த போதே சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் ஜுலை 17 ஆம் திகதி சிறுவன் வீட்டில் தனியாக இருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளக்கப்பட்டுள்ளதாகவும், மறுநாள், சந்தேக நபர் அச்சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.
பின்னர், சந்தேக நபர் திஸ்ஸ பகுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் பொலிஸாரிடம் புகார் அளித்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமணசிறி குணதிலக்க
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026