R.Tharaniya / 2025 மே 19 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனைச் சேர்ந்த சீனிவாசகம் கொழும்பில் உள்ள ஒரு நகைக் கடையில் பணிபுரிந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஏப்ரல் 7, 1965 அன்று, அவர் செட்டியார் தெருவில் வாடகைக்கு ஒரு சிறிய காட்சியறையை திறந்தார்,
நம்பிக்கை, தரம் மற்றும் உறவுகள் மிக முக்கியமானவை என்ற ஆனால் சக்தி வாய்ந்த நம்பிக்கையால் இயக்கப்பட்ட அடக்கமான தொடக்கமே தேவி ஜுவல்லர்ஸின் பிறப்பைக் குறித்தது.
தேவி ஜுவல்லர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இந்த ஆண்டு அதன் 60 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது,
இது ஆறு தசாப்த கால கைவினைத்திறன், நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தைக் குறிக்கிறது. தேவி ஜுவல்லர்ஸ் எனும் நம்பிக்கைக்கு பெயர் பெற்ற வணிக நாமம் ஏப்ரல் 7 ஆம் திகதி அதன் நிறுவனர் தினத்தையும் நினைவு கூர்ந்ததுடன்,அதன் நிறுவனர் சீனிவாசகத்தின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை மற்றும் தொலைநோக்குப் பார்வையை கௌரவிக்கிறது.
அவரது பயணம் இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நகை ஆபரண பெயர்களில் ஒன்றிற்கு அடித்தளமிட்டது.
பொதுவான தங்க நகைகளை விடவும் நேர்த்தியான நகைகளை அதிகமாக வழங்கும் ஒரு வணிக நாமத்தை அவர் உருவாக்கினார்,
மேலும் அதன் இதயப்பூர்வமான வாடிக்கையாளர் சேவைக்காக தேவி ஜுவல்லர்ஸ் தனித்து நின்றது. தேவியில், வாடிக்கையாளர்கள் குடும்பத்தினரைப் போல நடத்தப்படுகிறார்கள்,
அரவணைப்புடன் வரவேற்கப்படுகிறார்கள், நேர்மையுடன் வழிநடத்தப்படுகிறார்கள், வாங்கிய பிறகும் நீண்ட காலமாக நினைவு கூறப்படுகிறார்கள். அந்த தனிப்பட்ட தொடர்பு இன்றும் கூட ஒவ்வொரு அனுபவத்தின் மையமாக உள்ளது.
இந்த மைல் கல்லைப் பற்றி தெரிவித்த சீனிவாசகம் 'கடந்த 60 ஆண்டுகளில் எங்கள் பயணம் மீள்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் தரத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஆனது. எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருடனும் நாங்கள் கட்டியெழுப்பிய நம்பிக்கை மற்றும் உறவுகளில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம்.'எனதெரிவித்தார்.
தற்போது அடுத்த தலைமுறையினரால் வழிநடத்தப்படும் இந்த வணிகநாமம் அது கட்டமைக்கப்பட்ட மதிப்புகளுக்கு உண்மையாகவே இருப்பதுடன், புதிய கண்ணோட்டங்களால் வழிநடத்தப்பட்டு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
இந்த மைல்கல் கொண்டாடப்படும்போது,காலத்தால் அழியாத பாரம்பரியத்தை சமகால நேர்த்தியுடன் தொடர்ந்து நகைகளைவடிவமைப்பதன் மூலம் கடந்த காலத்தை மதிக்கும் தருணமாக மாற்றி வருகின்றது.அதன் ஒவ்வொரு பணியும் அர்த்தத்தையும் அழகையும் கொண்டுள்ளது உறுதி செய்கிறது.
இன்று,இல. 131,செட்டியார் தெரு,கொழும்பு 11 இல் அமைந்துள்ள தேவி ஜுவல்லர்ஸின் முதன்மை காட்சியறை 22கரட் தங்கம் மற்றும் வைர நகைகள், தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்புகள் மற்றும் நீடித்த நம்பிக்கை ஆகியவற்றின் நேர்த்தியான சேகரிப்பை வழங்கி,
சிறப்பின் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறது. அனுபவம் வாய்ந்த உள் வடிவமைப்பு குழுவுடன், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் நகைகளை அணியக்கூடிய பொக்கிஷமாக மாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago