Janu / 2026 மே 11 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி, ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (10) முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் ‘விஜய’ கடற்படைக் கப்பலுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஆலங்குடா கடற்பரப்பில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அப்பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை மறித்து சோதனையிட்ட நிலையில் 20 உறைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 622 கிலோகிராம் பீடி இலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதனையடுத்து, படகில் இருந்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்த கடற்படையினர், பீடி இலைகளையும் டிங்கி படகையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கற்பிட்டி, ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் ஆகியவற்றை புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எம்.எச்.எம். சியாஜ்


2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago