Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2024 நவம்பர் 10 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு, ஞாயிற்றுக்கிழமை (10) புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமானம் தொழிநுட்பக் கோளாறு காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத் தொடர்பாடல் துறை அதிகாரி தீபால் பெரேரா தெரிவித்தார்.
இந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-604 கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை 12.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னுக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஏ-330 விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறினால், விமானம் இரத்துச் செய்யப்பட்டதோடு, மாற்று விமானங்கள் மூலம் அனுப்புவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்திருந்தது.
எஞ்சிய பயணிகள் ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை 01.45 மணிக்கு புறப்படட ஸ்ரீலங்கன் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.
ஆனால் நள்ளிரவு 12.10 மணிக்கு அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-606 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் கூட்டுத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, ஒரே நேரத்தில் பல விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்ததன் காரணமாக இவற்றில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
40 minute ago
48 minute ago