Janu / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை, புலஸ்திபுர விஜித ஆரம்ப பாடசாலையில் வைத்து ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக வாக்களிப்பு நிலையத்தில் கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
புலஸ்திபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 49 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சனிக்கிழமை (21) பிற்பகல் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக புலஸ்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பொலன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளின் போது மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago