Janu / 2025 ஜூன் 01 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹல்தும்முல்ல, ஊவதென்ன பகுதியில், சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன், இளம் தம்பதியினர் ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்யப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹல்தும்முல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் 19 வயதுடையவர் என்றும், இளம் பெண் 20 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தம்பதியினர் ஹல்தும்முல்ல, வட்டகமுவை சேர்ந்தவர்கள் எனவும் குறித்த இளைஞன் இதற்கு முன்னர் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025