Janu / 2024 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி , உச்சமுனை தீவுப் பகுதியில் டிங்கி இயந்திர படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை மஞ்சள், கடற்படையினரால் புதன்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளது.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் உச்சமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகுகினை பரிசோதனை செய்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 17 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 749 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகத்தின் பெயரில், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 44 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட மஞ்சள் மற்றும் டிங்கி இயந்திர படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
ரஸீன் ரஸ்மின்

16 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago
51 minute ago