Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 18 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பியகம பிரதேச சபையினால் மல்வானை தொம்பே வீதியிலுள்ள ஒழுங்கையொன்றுக்கு ’ரஸீன் ஹாஜியார் லேன்’ என பெயரிடப்படும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(13) மாலை நடைபெற்றது.
இங்கு மல்வானையிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் வசிக்கும் சிங்கள முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மல்வானை முஸ்லிம்களின் அழைப்புக்கிணங்க வல்கம கிழக்கு ஸ்ரீ சுதர்சனாராமய விகாரையின் பிரதம மதகுரு மகுலுதுவே நந்தரதன தேரர் இப்பாதையின் பெயர் பலகையை திறந்துவைத்தார்.
மல்வானை றக்ஸபான ஜும்ஆ பள்ளிவாசலைச் சேர்ந்த தாஹிர் மெளலவி , மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவரும் சமூகசேவையாளருமான அல் ஹாஜ் எம்.எம்.ஏ இஸ்மைல் ,லேக் ஹவுஸ் பத்திரிகைகளின் மல்வானை முகவர் அல் ஹாஜ் ஏ.டபிள்யு.எம் ரஸீன், மற்றும் வல்கம கிழக்கு அனர்த்த முகாமைத்துவ செயற்குழுவின் தலைவர் திமுது சந்தருவன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago