R.Tharaniya / 2025 ஜூன் 02 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - மதுரங்குளி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சமீரகமபகுதியில் பாடசாலை மாணவர்ஒருவர்மின்சாரம் தாக்கிஉயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தசம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) மாலைஇடம்பெற்றுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி - சமீரகமபகுதியைச் சேர்ந்த முஹம்மது ரஸ்மின் முஹம்மது ரஜாத்(வயது16) என்றமாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்
குறித்த மாணவன்சமீரகமமுஸ்லிம் வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரணதரத்தில் கல்விபயிலும் மாணவர் என்பதுடன், அடுத்தவருடம்நடைபெற உள்ள சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றவிருந்தார்.
குறித்த மாணவன்,தனதுமூத்தசகோதரருடன் மீன் பிடிப்பதற்காக அருகில் உள்ள குளம் ஒன்றுக்கு சென்று விட்டு, மாலை மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார் எனத்தெரிவிக்கப்படுகிறது. இதன் போது, தனது வீட்டில் உள்ள பட்டறையில் வேலை செய்துகொண்டிருந்த தந்தை,அங்கு இரும்புக் கம்பியில் பொருத்தப்பட்டிருந்த போகஸ் லைட்டை சரி செய்யுமாறு வெளியே சென்று தனது இளைய மகனிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த மாணவன் போகஸ்லைட்டைசரி செய்ய முற்பட்ட போது,மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் குறித்த மாணவனை சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர்மரணவிசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர்மரணவிசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மத் ஹிஸாம்சம்பவஇடத்திலும், வைத்தியசாலையிலும் மரணவிசாரணை நடத்தினர்.
மேலும்,குறித்த மாணவனின் ஜனாஸாபிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்,மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்ட மரணம்எனத்தீர்ப்பு வழங்கி ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026