S.Renuka / 2025 மே 13 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.
சமீபத்திய SLTDA புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை மொத்த வருகை 930,794 ஆக உயர்ந்துள்ளது.
குளிர்காலத்திற்குப் பிறகு மேற்கத்திய நாடுகளிலிருந்து வருகையில் பருவகால சரிவு காணப்பட்டாலும், சராசரி தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 5,000 ஆகவே உள்ளது.
இருப்பினும், மே 2025 முதல் வாரத்திற்கான வருகைகள் முந்தைய ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளன - 2023 இல் 18,761 மற்றும் 2024 இல் 28,526 - இது ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது.
இதற்கிடையில், 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான சுற்றுலா வருவாய் 1,379 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கிதெரிவித்துள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 1,251.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 10.2% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.
2025 ஏப்ரல் இல் சுற்றுலா வருவாய் மாத்திரமாக 646.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .