Janu / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படை, கடலோர காவல்படை திணைக்களத்துடன் இணைந்து சிலாபம் மற்றும் தொடுவாவ கடல் பகுதிகளில் ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையொன்றை சனிக்கிழமை (21) அன்று மேற்கொண்டது.
சிலாபம் மற்றும் தொடுவாவ கடல் பகுதிகளில் கடலோர காவல்படை திணைக்களத்துடன் இணைந்து வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த பீடி இலைகள் பைகள் 25, சிகரெட் பெட்டிகள்14 மற்றும் பூச்சிக்கொல்லிகள் அடங்கிய ஒரு பெட்டி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
இதன் போது 992 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், 140,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், ஒரு தொகை பூச்சிக்கொல்லிகள், மற்றும் ஒரு டிங்கி படகுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் கலால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
எம் எச் எம் சியாஜ்

24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026