Janu / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரொன்துடுவ தெல்கட சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை (03) இரவு இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
மொரொன்துடுவ கோனதூவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய அசித உதயங்க சில்வா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் , சுகயீனமடைந்து இருந்த தனது சகோதரனுக்கு உணவு வழங்கி விட்டு தனது நண்பனுடன் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது . விபத்தில் காயமடைந்த 17 வயதுடைய மற்றைய இளைஞன் சிகிச்சைக்காக களுத்துறை , நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் பின்னர் தப்பியோடிய 25 வயதுடைய டிப்பர் சாரதி, பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago