Janu / 2025 ஜனவரி 07 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பியடி பகுதியில் திங்கட்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்குள்ளாகியதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் கருவலகஸ்வெவ 8ம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் சிக்கிய மற்றுமொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
எம்.யூ.எம்.சனூன்

14 minute ago
20 minute ago
31 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
31 minute ago
35 minute ago