2026 மே 08, வெள்ளிக்கிழமை

dd

திடீரென கடைகளுக்குள் புகுந்த PHI

Lenin Raj   / 2026 மே 08 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷிஹான் பாரூக்


அறுகம்பே சுற்றுலா பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பொத்துவில் மற்றும் அறுகம்பே பகுதிகளில் உள்ள உணவகங்கள் கடந்த புதன்கிழமை (06) இரவு அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸடீனின் வழிகாட்டலில், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உவைஸ் பாறுக் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மொத்தம் 24 உணவகங்கள் சோதனையிடப்பட்டதில், சுகாதார விதிமுறைகளை மீறிய 09 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுகாதாரமற்ற முறையில் காணப்பட்ட பெருமளவிலான உணவுகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், பணியாளர்களின் மருத்துவச் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .