2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'பாட்டுக்கார மீராசாஹிப்' காலமானார்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 21 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸரீபா

கல்குடாத் தொகுதியின் மூத்த இலக்கியவாதியும் பிரதேச மக்களால் 'பாட்டுக்கார மீராசாஹிப்' என்றழைக்கப்படுபவருமான கலாபூசணம் எஸ்.ஏ.மீராசாஹிப் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 04.00 மணியளவில் தனது 87ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை கிராமத்தில் முஹம்மதியா குர்ஆன் கலாசாலையை உருவாக்கி முப்பது வருடங்களுக்கும் மேலாக பிரதேச சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதித்ததுடன் அம் மாணவர்களின் திறமைகளைக் கண்டு அவர்களை மேடைப் பேச்சாளர்களாகவும், இஸ்லாமியப் பாடகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் உருவாக்கிய பெருமைக்குரியவர் கலாபூசணம் எஸ்.ஏ.மீராசாஹிப் ஆகும்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட வானொலி மற்றும் மேடை நாடகங்களை எழுதி நடித்துள்ளதுடன் இவரது நாடகங்கள் தேசிய மட்டத்தில் பரிசில்களும் பெற்றுள்ளன. ஐநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை ஏற்றி அவரே பாடியுள்ளார். சமகாலப் பிரச்சினைகளைப்பற்றி உடன் ஏற்றி பாடக்கூடிய வல்லமையுடையவர்.

இவரது ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

  Comments - 0

  • முஸ்டீன் Thursday, 28 February 2013 07:18 PM

    அமைதியாக இருந்து ஆர்ப்பாட்டமின்றி தான் சார்ந்த துறையில் தன்னால் முடிந்த அளவு பணியாற்றியவர். 2006ஆம் ஆண்டு அவருடைய சில பாடல்களை சாதாரண ஒலிப்பதிவுக் கருவிகள் மூலம் நான் ஒலிப்பதிவு செய்திருந்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றை வெளியிட முடியாது போனது, ஒலிப்பதிவின் தரம் போதாமையும் ஒரு பிரதான காரணம், கொழும்பில் இசையமைப்பாளர் ஆஷ்வாரி பஸால் அவர்களின் ஆஸ்வாரி ஸ்டுடியோவில் மீளவும் அவற்றை ஒலிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்தும் கடைசி வரை அவகாசம் கிடைக்கவே இல்லை.
    அவரின் சுவன வாழ்வுக்கு இறைவன் துணை செய்யட்டும்.

    Reply : 0       0

    jaufer Thursday, 07 March 2013 05:26 AM

    அமைதியானதும்,நாகரீகம் வாய்ந்ததுமான இலக்கியத்தையும் மற்றும் இசையையும் முழு மூச்சாகக் கொண்டவர். இன்று எமது பிரதேசத்தில் கவிஞர் என்று சொல்லிக் கொண்டு கொலைஞனாக உருப்பெற்றிருக்கும் களிசறைகளுக்கு இவரிடம் படித்துக் கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .