2025 ஜூலை 30, புதன்கிழமை

யாழில் இரு பெண் கலைஞர்களுக்கு விருது

Menaka Mookandi   / 2013 மார்ச் 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பெண் கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
 
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர் சுந்தரலிங்கம் ராஜேஸ்வரி மற்றும் நடனக் கலைஞர் லீலாம்பிகை செல்வராசா ஆகியோரே இவ்வாறு விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை 8ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது என்று யாழ். மாவட்ட சிறுவர், பெண்கள் அபிவிருத்தி குழு உத்தியோகஸ்தர் நவரத்னம் உதயனீ தெரிவித்தார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 2012ஆம் ஆண்டின் சிறந்த பெண் கலைஞர்களுக்கான விருது எதிர்வரும் 8ஆம் திகதி அலரிமாளிகையில் வைத்து வழங்கப்படவுள்ள நிலையிலேயே மேற்படி இருவரும் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .