2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

நடிகை ரெபேகா நிர்மலி காலமானார்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழ்பெற்ற சகோதர மொழி நடிகை ரெபேகா நிர்மலி, புற்றுநோய்க் காரணமாக புதன்கிழமை(13) காலை மரணமடைந்துள்ளார்.

சகோதர மொழி நாடகமொன்றில் 'வெத ஹாமினி' என்ற பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற இவர், எதிர்வரும் நவபம்பர் மாதம் 27 ஆம் திகதி தனது 50 ஆவது பிறந்த தினத்தை கொண்டாட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம், நிவந்திகா சேதியா வித்தியாலத்தில் தனது கல்வியை தொடர்ந்த இவர், 
'லோகய சுத்தய்', 'சுது சமனலயோ' ஆகிய மேடை நாடகங்களில் நடித்ததுடன் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.
 
இவர், இதுவரை 150 இற்கும் மேற்பட்ட நெடுந்தொடர்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 'கனங்களில் கைது செய்' திரைப்படத்திலும் இவர் பாத்திரமேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவரது இழப்பிற்கு கலையுலகம்; ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .