2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

அக்கினிக் குஞ்சு நூல் வெளியீடு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமை பெருமைப்படுத்தும் கனிவுமதியின் 'அக்கினிக் குஞ்சு' கவிதை நூல் வெளியீட்டு விழா, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (10) மாலை 4.30க்கு நடைபெறவுள்ளது. 

கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் லெனின் மதிவானனின் தலைமையில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டு விழாவின் முதல் பிரதியை புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ளவுள்ளார். 

சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரான கவிஞர் மல்லியப்பு சந்தி- திலக்ராஜ் கலந்துகொள்ளவுள்ளார். 

இந்த நூல் வெளியீட்டு விழாவில், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X