Niroshini / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலக கலாசார பெருவிழா நேற்று புதன்கிழமை(11) மாலை இடம்பெற்றது.
இதன்போது,சிலம்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் முதலாமிடத்தைப் பெற்ற இறக்காமம் சிலம்பாட்டக் குழுவினர் மற்றும் வாழ்வீச்சு, கோலாட்டம், நடனம், பாடல் போன்ற நிகழ்வுகளில் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற குழுவினரதும் நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் கலாசார உத்தியோகத்தர் ஆர்.டீ.வசந்த ரஞ்சனியின் வழிகாட்டுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை ,சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.ஏ.கியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


18 minute ago
30 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
41 minute ago
1 hours ago