Editorial / 2018 மே 18 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}









2017 கொடகே கையெழுத்துப் பிரதிப் போட்டியில் பரிசுபெற்ற கொடகே வெளியீடான பிரமிளா பிரதீபனின் “கட்டுபொல” நாவல் அறிமுக விழா, கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது.
இலக்கியப் புரவலர் ஹாஸிம்ஒமர் முன்னிலையிலும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்புப் பிரதியை, இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமரிடமிருந்து மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் செயலாளர் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சித் தொகுப்புரையும் வரவேற்புரையையும் சிவனு மனோகரன் வழங்கினார். பேராசிரியர் துரை மனோகரன், எழுத்தாளர் மு.சிவலிங்கம், ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில், கட்டுபொல் பயிர்ச்செய்கையால் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, கட்டுபொல் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவிகளான எஸ்.அனுஜா, டி.தர்ஷினி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
ஏற்புரையையும் நன்றியுரையும் நூலாசிரியை பிரமிளா பிரதீபன் முன்வைத்தார்.
21 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago