2025 மே 02, வெள்ளிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Niroshini   / 2016 ஜூலை 18 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


வகவம் வருடாந்த கலைவிழாவும் கௌரவிப்பும் சிறப்பு கவியரங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளவத்தையிலுள்ள தமிழ் சங்கத்தில் வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது இரண்டாண்டு கால வகவ நிகழ்வுகளின் சுவடுகள் அடங்கிய “வகவப் பதிவுகள்” எனும் நூலும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில், நவமணி பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியர் பீட உறுப்பினரான கலைவாதி கலீல் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதில், கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அனூஷா கோகுள பெர்ணான்டோ விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது, “சிங்கள - தமிழ்க் கவிதைகள் உறவுகள்” எனும் தலைப்பில் மொழி பெயர்ப்பாளர் ஹேமச்சந்திரன பதிரனவும் வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமையுரையும் வகவம் ஸ்தாபகத் தலைவர் டொக்டர் தாஸிம் அஹமது கௌரவிப்பு உரையும் நிகழ்த்தினர்.

இதேவேளை, மேமன் கவியின் தலைமையில சிறப்பு கவியரங்கும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X