2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குறுந்திரைப்படங்கள் சமூகவலங்களைப் பேச வேண்டும்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-ஏ.எல்.எம்.ஷினாஸ்  

குறுந்திரைப்படங்கள் சமூகவலங்களைப் பேச வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அகில இலங்கை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

தென் கிழக்கு கலை, கலாசார மையத்தின் ஏற்பாட்டில், உளவள ஆலோசகர் றினோஸ் கனிபா இயக்கி வெளியிட்ட 'மாற்றம்' குறுந்திரைப்பட -வெளியீட்டு நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (14), மாலை கல்முனை ஆஷாத் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

'குறுந்திரைப்படம் உலகளாவிய ரீதியிலே மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஒரு ஊடகமாக விளங்குகின்றது. ஒரு விடயத்தினைப் பற்றி மக்கள் மத்தியில் இலகுவாகக் கொண்டு சேர்ப்பதில் குறுந்திரைப்படம் செல்வாக்குச் செலுத்துகின்றது. குறுந்திரைப்படங்களின் மூலமாக சமூக, கலாசார விழுமியங்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும். சமூகத்தில் நடைபெறும் விடயங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பில் இளைய சமுதாயத்தினர் மக்கள் மத்தியில் பேச முனையும் போது, சமூக அநீதிகளைக் களைய முடியும் என்பது உறுதி,' என்று தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .