Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணுவில் கந்தசுவாமி கோயில் இளந்தொண்டர் சபையின், “சத்தியவான் சாவித்திரி” இசை நாடகமானது, தம்பி ஐயா சிவகுமாரன் நெறியாள்கையில், கடந்த சனிக்கிழமை, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.
இதில் சத்தியவானாக நாகையா கிருபாகரன், சாவித்திரியாக பரமலிங்கம் அருமைநாதன், யமதர்மனாக இராசையா பாலராசன், சுமாலியாக செகராசபிள்ளை செந்தில்வேல் மற்றும் நாரதராக நடராசா தவசோதிநாதன், சித்திரபுத்தனாக நாகரத்தினம் திருக்கணணேஸ், யமதூதராக செல்வரத்தினம் உதயகுமார், நடேசமூர்த்தி நவநீதன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கதிரவேலு முருகையா மிருதங்கம் வாசிக்க, கேசவராசா தவனேஸனின் ஹார்மோனிய இசையில் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு அ.குமார் ஒப்பனை வழங்கியிருந்ததோடு, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுச் செயலாளர் திருமதி.சுகந்தி இராஜகுலேந்திரா நன்றியுரை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
30 Apr 2025
30 Apr 2025
30 Apr 2025