Sudharshini / 2016 ஜூலை 05 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் இந்து போர்ட் சு.இராசரத்தினத்தின் 132 ஆவது பிறந்தநாள் விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்,; சைவவித்தியா விருத்திச் சங்கத் தலைவர் வி.ரி.சிவலிங்கம் தலைமையில், சங்க ஆராதனை மண்டபத்தில திங்கட்கிழமை (04) இடம்பெற்றது.
முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நா.சண்முகலிங்கன், சிறப்பு விருந்தினராக பிராந்திய முகாமையாளர் ஹற்றன் நஷனல் வங்கி சி.சுந்தரேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், சைவச்சிறுவர் இல்ல மாணவர்களின் வரவேற்பு நடனமும், கருணை இல்ல மாணவர்களின் 'நரிமேளம்' நாடகமும் இடம்பெற்றது. அத்துடன், 'இல்லக விளக்கு' மலர் வெளியீடும் இடம்பெற்றது. பல்கலைக்கழகம் சென்ற மற்றும் பாடசாலை பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
.jpg)
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025