2025 மே 01, வியாழக்கிழமை

தேசிய குறு நாடக விழா 2012

Kogilavani   / 2012 ஜனவரி 25 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)

'தேசிய குறு நாடக விழா 2012' நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு, ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் ஆரம்பமானது.

அரச நாடகக் குழு, இலங்கைக் கலைக் கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நாடக விழா எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நாடகவிழாவின்போது, தமிழ் மொழியைச் சேர்ந்த 9 குறு நாடகங்களும், 17 சிங்கள குறு நாடகங்களும் மேடையேற்றப்படவுள்ளன.

இந்நாடக போட்டியின் நடுவர்களாக பேராசிரியர் மௌனகுரு, எம்.எம்.மகீல், கிழக்கு பல்கலைக்கழக நுண்கலை பீடத் தலைவர் சி.ஜெயசங்கர், கலைச்செல்வம், பாலித சில்வா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

இதன்போது, டீ.கயூரியாவின் 'ஏகலைவன்', கே.திருச்செந்தூரனின் 'கடலின் அக்கரை போவோர்', என்.குலரத்ன, ஏ.சனத்குமார ஆகியோரின் 'கல்யான கதை', என்.சி.நஜீமுடீன்  'சலோமி',   எஸ்.லீலாவதி, ஆர்.கமலி ஆகியோரின் 'பயணிகள்',   கே.மோஹன் குமாரவின் 'பாவக்கறை', கே.ஸ்ரீ.கந்தவேலின் 'சிலம்பின் கனல்' ,  நிரஞ்சன் சந்திராதீயவின் 'பரதனும் சீதையும்' , பீ.சிவநேசனின் 'தாகம்' ஆகிய  தமிழ் குறு நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன.

இதேவேளை, சுதத் அபேஸ்ரீவர்தனவின் 'மகே காலயே வீரயக்', ரொஹான் டி சில்வாவின் 'அபி', பசில் ரத்னவீரவின் 'உன்வஹன்சே'  , எஸ்.ஏ.சம்பத் சதுரங்க பெரேராவின் 'எய் உம்பலா ஆவே' , உபுல் சஞ்சீவவின் 'கெப்பர' , நவன் தர்ஷன லியனாராய்ச்சியின் 'டயனோசர்ஷ் பிரேமய' , ஆஸிரி உதாகர ஜயரத்னவின் 'சந்த எல்லா மரய்' , நவன் தர்ஷன லியனாராய்ச்சியின் 'தீஸ்ன் தென்னெக்'  , அம்த ரப்திகலவின் 'பிரேமய நம்' , சாலக ரனசூரியவின் ' ஹெலோ' , கே.சுனெத் தேசபிரியவின் 'அதுர சஹ எலிய' , எஸ்.ஏ.சம்பத் சதுரங்க பெரேராவின் 'மெரென்ன விதியக் கியன்ன', கே.ஏ.கே ஜயசிங்கவின் ரியாலிட்டி , கே. ஏ. ஜீ. சந்ர குமாரவின் 'பல்லோ தென்னெக்' , கயான் தேசப்பிரியவின் 'கூடுவட எனகம்', இந்திக பெரிதினாந்தின்; 'கலம்போ கலம்போ' ஆகிய சிங்கள குறு நாடகங்களும் மேடையேற்றப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • kajan Tuesday, 31 January 2012 08:27 PM

    படத்தினை பார்த்தோம், ரொம்ப மகிழ்ச்சி.. வீடியோ இணைப்பை கொஞ்சம் சொருகி இருந்தால் இன்னும் ரொம்ப வடிவாக ' நாடகத்தை பார்த்து ரசித்திருப்போம்..... அனைவரும் பார்க்கும் படி இதை வெளியாக்கிய உள்ளத்துக்கு மிக்க நன்றி ......l

    Reply : 0       0

    sanu priya Saturday, 04 February 2012 03:38 AM

    ரொம்ப ரொம்ப காமடியாக இருக்கு இதன் வீடியோ இணைப்பை பொருத்தி இருந்தால் அனைவரும் கண்டு மகிழ்வர். சு.வி.அ.க.நி இன் கலைஞர்களின் திறமைகளை பாராட்டுகின்றோம் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .