2025 மே 10, சனிக்கிழமை

யாழ். இசைவிழா 2013

Kogilavani   / 2013 பெப்ரவரி 01 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கோகிலவாணி


யாழ். இசைவிழா 2013 எதிர்வரும் மார்ச் மாதம் 1,2 ஆம் திகதிகளில் யாழ். மாநகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

காலி இசைவிழா 2012இன் துணை நிகழ்வாக யாழ். இசைவிழா 2013 நடைபெறவுள்ளதாக யாழ்.இசைவிழாவின் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அண்மையில் கொழும்பு, தாஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட விழா ஏற்பாட்டுக்குழுவினர் இதுதொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில்,

'22,000 இற்கும் மேற்பட்ட கலை ஆர்வலர்களை ஈர்த்த காலி இசைவிழாவின் சகோதர விழாவாக யாழ்.இசைவிழா இம்முறை இரண்டாவது தடவையாக யாழில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் உள்ளூர் கலைஞர்கள் மட்டுமன்றி பங்களாதேஸ், பிரேஸில், இந்தியா, நோர்வே, பலஸ்தீன் ஆகிய நாடுகளில் உள்ள கலைஞர்களும் தமது நாட்டுக் கலை ஆற்றுகைகளை இந்த மேடையில் அரங்கேற்ற உள்ளனர்.

இந்நிகழ்வானது இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கலைஞர்களை ஒன்று சேர்ப்பதுடன் நமது நாட்டுக்கலைகளை சர்வேத கலைஞர்கள் அறிந்துகொள்வதற்கும் சர்வதேச கலைகளை நமது நாட்டு கலைஞர்கள் அறிந்துகொள்வதற்குமான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அமைந்துள்ளது.  இதேவேளை, இருவருக்கும் இடையிலான இடைத் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கான சிறந்த அடிதளமொன்றைத் இந்த இசைவிழா தோற்றுவிக்கின்றது.

இலங்கையில் பல்வேறுபட்ட பிராந்தியங்களிலும் காணப்படும் வேறுபட்ட பாரம்பரியங்களை ஒரே இடத்தில் இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ள பார்வையாளர்களுக்கு காட்டுவதுமின்றி இப் பாரம்பரியக் கலைஞர்களை குறிப்பாக பாடசாலைச் சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் மத்தியில் அறிமுகப்படுத்துவதும் யாழ். இசைவிழாவின் நோக்கமாக உள்ளது.

அத்துடன் யாழ். வரலாற்று சிறப்புக்கள், கலை மற்றும் கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாரம்பரிய இசை வெளிப்பாடுகளை பாதுகாத்து, அவற்றைப் பரிமாறி இலங்கையின் இசை கலைகளை வளர்ச்சியுற செய்யும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட பாரிய இலாப நோக்கற்ற இசைக் கூட்டுறவு அமைப்பின் ஒரு அங்கமே இந்த நிகழ்வாகும்.

கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட இசைவிழாக்களில் பங்குபற்றிய கலைஞர்கள் தற்போது சர்வதேச ரீதியிலான கலைநிகழ்வுகளில் பங்குற்றும் வாய்ப்புகளை இவ் இசைவிழா ஏற்படுத்தி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.' என தெரிவித்தனர்.

இந்நிகழ்விகு பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.

ரோயல் நோர்வே தூதரகம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா முகவர் அமைப்பு (ரளயனை) ஆகியன யாழ். இசை விழாவிற்கான நிதி அனுசரணையை வழங்குவதுடன் அரு ஸ்ரீ கலைகயத்தின் ஆலோசணையுடன் சேவாலங்கா மன்றம் இவ்விழாவை ஒழுங்கமைக்கவுள்ளது.

இதேவேளை, இலங்கை இணக்கப்பாட்டு பணியகம் மற்றும் யாழ். மாநகர சபை ஆகியவற்றின் இணை அனுசரணையுடனும் இவ்விழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இரண்டு நாட்களும் காலை 9.00 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக கூடாரங்களில் நடைபெறவுள்ளன.

காலை நேர நிகழ்வுகள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கான இசைப் பயிற்சிப் பட்டறையாக அமைகின்றன. இதேவேளை, அனுபவம் மிக்க கலைஞர்களின்; ஆற்றுகைகள் மாலை வேளைகளில் மேடையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், இசைவிழாவின் பணிப்பாளர் கௌசல்யா நவரட்ன, நோர்வே தூதரக அபிவிருத்தி பிரிவின் ஆலோசர் டேக்னி மொஜோஸ், யுஎஸ்எய்ட் அமைப்பின் நாட்டு பிரதிநிதி டம்மி ஹரிஸ், அரு ஸ்ரீ கலையகத்தின் பணிப்பாளர் அருந்ததி ஸ்ரீரங்கநாதான், இலங்கை இணக்கப்பாட்டு பணியகத்தின் பொதுமுகாமையாளர் விபுல வனிகசேகர உட்பட பலர் கலந்துகொண்டனர்.  (படங்கள்: குஷான்பதிராஜ)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X