2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கனடாவில் இந்திய மன்னர்கள்!

A.P.Mathan   / 2010 ஜூலை 12 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


18ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடையும் வரையான காலப்பகுதியில் வாழ்ந்த மன்னர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்காட்சியொன்று கனடாவில் நடைபெறவிருக்கிறது.

எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி கனடா, ஒன்டாரியோ ஆர்ட் கலரியில் ஆரம்பமாகும் இக்கண்காட்சி அடுத்தவருடம் பெப்ரவரி 27ஆம் திகதிவரை நடைபெறவிருக்கிறது.

இக்கண்காட்சியில் இந்திய மன்னர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், மணிமகுடம், ஓவியங்கள் என 200 இற்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. லண்டனினைச் சேர்ந்த விக்டோரியா அன்ட் அல்பட் அரும்பொருட் காட்சியகம் இந்த கண்காட்சியினை ஏற்பாடுசெய்திருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

இக்கண்காட்சி மூலமாக அக்கால மன்னர்களின் வாய்வியல், சமூக, வரலாற்றுப் பின்னணிகள், பெருமைகள், சாதனைகள் என்பவற்றை இக்காலத்தில் உள்ளவர்கள் உணரக்கூடியதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .