Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் பாத்கண்டே இசைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் சஞ்சய ஹேமால் வஹலதந்திரியின் இந்துஸ்தானி இசைக் கச்சேரி இன்று புதன்கிழமை மாலை கொழும்பிலுள்ள இந்திய கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இந்த இசைக் கச்சேரிக்கு விஸாரத் பி.இசுரு தாரக பெரேரா - தபேலா இசையினையும், பி.ஏ.அமில மதுசங்க - வயலின் இசையினையும், விஸாரத் நளின் ஜினேந்திர அல்விஸ் - ஹார்மோனிய இசையினையும், நிரோஷா - தம்புரா இசையினையும் வழங்கினர்.
இலங்கையிலுள்ள இந்திய கலாசார மத்தியநிலையத்தின் புலமைப் பரிசில் மூலம் இந்தியாவின் பாத்கண்டே இசைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வரும் சஞ்சய - இலங்கையின் முன்னணி கலைஞர்கள் பலரிடம் இசையினை முறைப்படி கற்றிருக்கிறார்.
இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள இந்திய கலாசார மத்திய நிலையத்தின் இயக்குநர் எம்.ராமச்சந்திரன் அறிமுகவுரை நிகழ்த்துவதையும் இசை நிகழ்வினை சஞ்சய நடத்துவதனையும் கலந்துகொண்ட பார்வையாளர்களையும் படங்களில் காணலாம். Pix: Nisal Baduge
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago