2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சிறுவர் நாடக நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு செங்கதிர் இலக்கிய வட்டமும் மட்டக்களப்பு பொது நூலக வாசகர் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவை நித்தியானந்தனின் 3 சிறுவர் நாடகங்கள் மற்றும் சிறுவர் சிறுகதை நூல்களின் வெளியீட்டுவிழா இன்று காலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைகழக பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மூத்த எழுத்தாளர் அன்புமணி ரா.நாகலிங்கம், தேசிய கலை இலக்கிய பேரவை தலைவர் சட்டத்தரணி சோ.தேவராஜன், செங்கதிர் இலக்கிய வட்ட தலைவர் த.கோபாலகிருஸ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

'சின்ன சின்ன நாடங்கள்', 'பட்டியும் குட்டியும்', 'நாய்க் குட்டி ஊர்வலம்' ஆகிய சிறுவர் நாடக நூல்களும் 'சின்னச்சின்ன கதைகள்' சிறுவர் சிறுகதை நூல், பாப்பாபாரதி இறுவெட்டு ஆகியன  இதன்போது வெளியீடு செய்யப்பட்டன. மேலும் சிறுவர் நாடகம் ஒன்றும்  இதன்போது நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .