2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா

Menaka Mookandi   / 2011 நவம்பர் 07 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.ராஜேஸ்வரன், எம்.எம்.எம்.ரம்ஸீன்)

மத்திய மாகாண தமிழ்க்கல்வி, இந்துக்கலாச்சார, கைத்தொழில், விளையாட்டு, மகளிர் விவகார, கிராமிய அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு வசதிதகள் அமைச்சின் ஏற்பாட்டில் 2011 ஆம் ஆண்டு மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஆரம்பமானது.

முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் கௌரவ.டிக்கிரி கொப்பேகடுவவும் சிறப்பு அதிதியாக உதவி இந்திய உயர்ஸ்தானிகர் ஆர்.கே. மிஸ்ராவும் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் இரம்பொடை சௌமியமூர்த்தி தொண்டமான் கலாச்சார நிலையத்தில் இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ பி.இராஜதுரை பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் பலர் கௌரவிக்கப்பட்டதோடு பல கலை, கலாச்சார நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .