2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியா பிரதேச கலை இலக்கிய பெருவிழா

Super User   / 2011 நவம்பர் 08 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச கலை இலக்கிய பெருவிழா இன்று செவ்வாயக்கிழமை வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இரு அமர்வுகளாக இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலாளரும் பிரதேச கலாசார பேரவையின் தலைவருமான அ.சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் காலை நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக வவுனியா மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜெ.விஸ்வநாதனும் சிறப்பு விருந்தினராக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமனும் கலந்துகொண்டனர்.

இதன்போது பேராசிரியர் கா.சிவத்தம்பி தொடர்பான நினைவு பேருரையினை ஆசிரியம் சஞ்சிகையின் ஆசிரியர் தெ.மதுசூதனன் நிகழ்த்தினார்.

இதனையடுத்து 'மானிட யதார்த்தத்தை தமிழ் புலவர்கள் பாட தவறிவிட்டனரா? அல்லது பாடியுள்ளனரா?' என்ற தலைப்பில் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் பட்டிமன்றமும் 'இருக்கிறம்' என்ற தலைப்பில் வவுனியா பிரதேச செயலாளர் கவிஞர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் கவியரங்கமும் இடம்பெற்றது.

இறுதியாக கலாநிதி அகளங்கனை நீதிபதியாக கொண்டு 'குற்றவாளிக் கூண்டில் கம்பன்' என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும் இடம்பெற்றது.

மாலை நிகழ்விற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். சாள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாலை நிகழ்வுகளில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த நடன கல்லூரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் இசை மற்றும் நாடக நிகழ்வுகள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X