2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'பாஸ் இட் ஒன் வென் யூ ஆர் டன் வித் இட்' குறும்படத்தின் தொடரும் வெற்றிப் பயணம்

Super User   / 2011 டிசெம்பர் 22 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு: இலங்கை கண் தான அமைப்பிற்காக லியோ பேர்னார்ட் சொலூசன்ஸ் இன்கோர்பரேஷனினால் உருவாக்கப்பட்ட 'பாஸ் இட் ஒன் வென் யூ ஆர் டன் வித் இட்'  எனத் தலைப்பிடப்பட்ட குறுந் திரைப்படம் , ஸ்பைக்ஸ், ஆசியா கொண்டாட்டத்தில் விருது வென்று, நாட்டின் முதலாவது ஸ்பைக்ஸ் விருது வென்ற திரைப்படம் என்ற பெருமையைப் பெற்று இலங்கை விளம்பரத் துறையில் வரலாற்று பதிவாகியுள்ளது.

இவ்வெற்றிப் பயணத்தின் தொடர்ச்சியாக, அண்மையில் நடைபெற்ற நுககநை  விருதுகள் 2011இலும் இந்த குறுந் திரைப்படம் விருது வென்றுள்ளது.

சிறந்த ஆக்கப்பூர்வமான விளம்பரத்திற்காக வழங்கப்படும் பிராந்தியத்தின் மிகச் சிறந்த பிரபலமான விருதுகளின் ஒன்றான ஸ்பைக்ஸ் ஏசியாவில்   வெண்கல விருதினையும், மிகவும் பயனுள்ள விளம்பரத்திற்காக வழங்கப்படும் Effie விருதுகளில், வெள்ளி விருதினையும் இந்த குறுந் திரைப்படம் வென்றுள்ளது.

இலங்கையர்களின் இதயத் துடிப்பு, மக்கள் மற்றும் அவர்களின் நடத்தையை தவறின்றி லியோ பேர்னார்ட்ஸ் புரிந்து கொண்டுள்ளமையை இந்த விருதுகள் நிரூபித்துள்ளன. தொடர்பாடலுக்கான பயனுள்ள விடயங்களை உருவாக்குவதற்கான சூத்திரமாகவும் இதுவே காணப்படுகின்றது.

விருதுகளை வென்றமை தொடர்பில் கருத்து தெரிவித்த, லியோ பேர்னார்ட் சொலூசன்ஸ் இன்கோர்பரேஷன் முகாமைத்துவப் பணிப்பாளர் ரணில் டீ சில்வா, 'இந்த குறுந்திரைப்படம் வென்றுள்ள இரண்டு விருதுகளும், அதன் ஆக்கப்பூர்வத் தன்மையை மாத்திரமல்லாது, அதன் பயனுறுதித் தன்மையை அங்கீகரிப்பனவாக உள்ளன. இது ஒரு தனித்துவமான ஒன்றிணைப்பு.

மனித உணர்வு மற்றும் தொடர்பாடல் என்ற சக்திகளை மாத்திரம் இணைக்காது, நடவடிக்கையொன்றுக்கு அழைப்பு விடுக்கும் தவறற்ற உணர்வினை வெளிப்படுத்தியுள்ள வெற்றி நடவடிக்கையாக இது காணப்படுகின்றது. சிறந்த கதையானது எப்போதும், அனைத்து தடைகளையும் கடந்து, மக்களை நடவடிக்கை புரிவதற்கு தூண்டும் என்பதனை இந்த குறுந் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள அதிகரித்த வரவேற்பு நிரூபிக்கின்றது' எனக் குறிப்பிட்டார்.
இலங்கை கண் தான அமைப்புக்காக மாத்திரம் எழுதி, இயக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், பார்வையில்லாதவர்கள் மற்றும் நாம் அவர்களுக்கு உதவுதற்கான சக்தியற்றவர்கள் என்ற உணர்வினை உடையவர்கள் போன்றோரின் மனநிலையின் காரணமான ஏக்கத்தின் உணர்வுபூர்வமான உணர்வை வெளிப்படுத்துகின்றது.

ஒருவரின் கண்களை தானம் செய்யும் நடவடிக்கையை வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.

இந்த குறுந் திரைப்படத்தினை கருத்தாக்கம் செய்து, இயக்கியவர் சுபாஸ் பின்னபொல. இந்த முயற்சியின் ஆரம்பத்தில் தமது கண்களை தானம் செய்யும் நடவடிக்கைக்கு முதலில் கையெழுத்திட்டதாக அவர் குறிப்பிடுகின்றார். அவரைத் தொடர்ந்து, அவரது அணியைச் சேர்ந்தவர்களும், மற்றும் நிறுவனத்தின் பெரும்பாலான உறுப்பினர்களும், தயாரிப்பு குழுவைச் சேர்ந்தவர்களும் கண்களை தானம் செய்துள்ளனர்.

'என்னைப் பொறுத்த வரையில், இந்த விருதுகள் மேலதிக பலன்கள் மாத்திரமே. மிகவும் முக்கியமான விடயமாக இருப்பது, இந்த வர்த்தக நடவடிக்கையின் விளைவாக, இந்த பையனும் மற்றும் மில்லியன் கணக்கான மக்களும் விரைவில் கண் பார்வை என்ற கொடையைப் பெற வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கின்றேன். அது சாத்தியமானது அல்ல. எனினும், அதற்கு ஆர்வமே மிகவும் முக்கியமானது. ஏனையோரும் இதனைப் பின்பற்றுவார்கள்' என இந்த அளப்பரிய வெற்றியின் பின்னாலுள்ள நபரான பின்னபொல தெரிவிக்கின்றார்.

2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி முதன் முறையாக திரையிடப்பட்ட இந்த திரைப்படம், பல மில்லியன் கணக்கான இலங்கை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யூரியூப் இணையத்தளத்தில் மாத்திரம் 200,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். நடவடிக்கைக்கான இந்த அழைப்பின் மூலம், உலகளாவிய ரீதியில் பலர் தன்னார்வத்துடன் கண்களை தானம் செய்வதற்கும் வழி வகுத்துள்ளது. மிச்சிகன் கண் வங்கி மற்றம் கண்பார்வை இழந்தோருக்கான அமெரிக்க நிதியம் போன்ற நிறுவனங்களிடமிருந்து வாழ்த்துகளையும் பெற்றுள்ளது.

இணையத்தளத்தில் ஈடுபடலில் ஆரம்ப நிலையில் இலங்கை இருக்கின்ற போதிலும், இணைய ஊடக சூழலில் இந்த தொடர்பாடலானது முந்திய அனைத்து விதிமுறைகளையும் கடந்துள்ளது.

இருப்பினும், எந்தவொரு ஆவணத்தினையும் பார்வையிடல் என்பது 5,000 என்ற எண்ணிக்கையை தாண்டும் போது அது வெற்றிகரமானது என்ற நிலையை அடைந்து விடுகின்றது. இந்த நிலையில் 'பாஸ் இட் ஒன் வென் யூ ஆர் டன் வித் இட்'  என்ற குறுந்திரைப்படம் லுழரவுரடிநஇல் 200,000க்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டு, இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட ஒளிக்காட்சிகளின் பட்டியலில் 32ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அத்துடன் உலகளாவிய பில்ம் அனிமேஷனில்  அதிகம் பார்வையிடப்பட்ட ஒளிக்காட்சிகளின் பட்டியலில் 44ஆவது இடத்தையும், பில்ம் அனிமேஷனில்  அதிகம் டுவிட் செய்யப்பட்ட இரண்டாவது ஒளிக்காட்சியாகவும் காணப்படுகின்றது. கண் தான விண்ணப்பங்களை கோரி விசேட தொலைபேசி இலக்கத்திற்கு 5,000இற்கும் மேற்பட்ட அழைப்புக்கள் கிடைத்துள்ளன.

இந்த குறுந் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த, லியோ பேர்னார்ட் சொலூசன்ஸ் இன்கோர்பரேஷனின் சிரேஷ்ட ஆக்க அதிகாரி, மைக்கல் கொன்ராட், 'அறிவு, மனிதன், நல்லெண்ணம், ஆச்சரியம், ஈர்த்தல், சிறந்த உபாயம், சிறந்த கதாபாத்திரங்கள், சிறந்த எழுத்து, சிறந்த இயக்கம், சிறந்த தொகுப்பு என்பவற்றை இணைக்கும் போது எதுவுமே தோல்வியடையாது. எனக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்ததாக உள்ளது' என குறிப்பிட்டார். மக்களின் நடத்தையில் நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்ட இந்த கதையில் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் அவரது சொற்கள் பிரதிபலிக்கின்றன. (படப்பிடிப்பு: கித்சிறி டி மெல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X