2025 ஜூலை 16, புதன்கிழமை

கலாபூசண விருது தேர்வில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 23 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் கலாபூசண விருதுக்கான தேர்வில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கலாபூசண விருது வழங்கலுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சகல மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நடிகர்கள், எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் ( மரச் சிற்பம், நெய்தல், பின்னல் வேலைகள் செய்வோர் மற்றும் நாட்டியக் கலைஞர்கள், பொம்மலாட்டம், மத்தளம் உள்ளிட்ட மேளக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், பாடகர்கள், பாடகிகள், திரைப்படக் கலைஞர்கள், மாயாஜாலக் கலைஞர்கள் ஆகியோருக்கு மேலதிகமாக பாரம்பரிய கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்குமாறும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விருதிற்காக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும்  பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பதுடன், கலைத்துறை உன்னத சேவையாற்றி 2012.12.15 அன்று 60 வயதினை பூர்த்தி அடைபவராகவும் இருத்தல் வேண்டும்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் கலாபூசண விருது வழங்கலுக்கான விண்ணப்ப்படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கலைஞர்கள் தத்தமது பிரிவு கலாசார உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொண்டு உரிய விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X